ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற நடிகர் பிரசாந்த்..ரூ.2,000 அபராதம் வித்தித்த போலீஸ்!
பைக் ஓட்டிக் கொண்டே அளித்த பேட்டியில் பிரசாந்த் ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பிரசாந்த்..
தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் அப்போதைய காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தார். இவர் 1990 -ம் ஆண்டு வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனால் சமீப காலமாக திடீரென பட வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார்.இடைவெளிக்கு பின்னர் பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். அது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதன்பின் அந்தகன் படத்தில் நடித்துள்ளார்.
நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த படத்திற்கான புரமோஷனில் பிஸியாகி இருக்கிறார். இதற்காக அவர் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார்.
போலீஸ் அபராதம்
அதன்படி அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். சென்னை தி.நகர் சாலையில் புல்லட் ஓட்டிக் கொண்டே பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார். அப்போது அவரும் அவருக்கும் பின்னல் அமர்ந்திருந்த தொகுப்பாளினியும் ஹெல்மெட் அணியாமல் பயணித்துள்ளனர்.
#ActionTaken on reported violation.#GreaterChennaiTraffic https://t.co/bAZecvNYgn pic.twitter.com/TqJVoLi9MT
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 1, 2024
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், ட்விட்டர்வாசி ஒருவர் அந்த வீடியோவை சென்னை மாநகர காவல்துறைக்கு டேக் செய்து, “டூவீலர் விதிகள் சாமானியருக்கு மட்டுமா .. ஒரு பிரபல நடிகராக பிரசாந்த் இது போல் விதிமுறைகள் மீறும்போது நடவடிக்கைகள் இருக்காதா,
இல்லை நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தலாமே ..” எனக் கூறியிருநந்தார்.ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் தொகுப்பாளினி ஆகியோருக்கு ரூ.2,000 அபராதம் விதித்தது சென்னை போக்குவரத்து காவல்துறை.