ஹனிமூன் ட்ரிப்; விஜய் மாதிரி பண்ணனும் - பிரசன்னாவிடம் கண்டிஷன் போட்ட சினேகா!
பிரசன்னா, நடிகை சினேகா குறித்து பகிர்ந்த தகவல் வைரலாகி வருகிறது.
நடிகை சினேகா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்ட சினேகா தனியார் சேனலில் நடக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார். இதற்கிடையில், சினேகாலயா என்ற துணி கடையையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
பிரசன்னா தகவல்
இந்நிலையில், பிரசன்னா அளித்த பேட்டி ஒன்றில், எங்களுக்கு திருமணம் ஆன புதிதில் வெளிநாடு ஒன்றுக்கு ஹனிமூன் போயிருந்தோம். அப்போது குஷி படத்தில் விஜய் சார் காலில் கயிறை கட்டிக்கொண்டு Bungee Jumping செய்வாரே அதை செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.
உடனே நான் கூடவே சினேகாவையும் அழைத்தேன். ஆனால் அவரோ வர முடியாது என்று சொல்லிவிட்டார். அதனையடுத்து அவரிடம் நான், நீ வர வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன்.
அதற்கு அவர், என்னுடைய பெயரை நீ உன் உடலில் டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். உடனடியாக நானும் அப்படியே செய்துகொண்டேன். பிறகுதான் அவர் அந்த Bungee Jumping வந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.