4 ஹீரோக்களுடன் டேட்டிங் செய்த பிரபல நடிகை - கடைசியில் திருமணம் அவரோடுதான்!
நடிகை சினேகா காதல் வாழ்க்கை குறித்த தகவல்கள் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
சினேகா
தமிழ் சினிமாவிற்கு என்னவளே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தனக்கென தனி ரசிகர்களை பிடித்து புன்னகை அரசியாகவும் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். 2009ல் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.
டேட்டிங் வதந்தி
அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முன்னதாக ஆயுதம், விரும்புகிறேன் போன்ற படங்களில் பிரசாந்துக்கு கதாநாயகியாக நடித்தார்.
அதில், கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனதால் இருவரும் டேட்டிங் செய்ததாக கிசுகிசுக்கப்பட்டது. என்னவளே, பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் மாதவனுடன் ஜோடி போட்டார். இவர்களுக்கிடையே நெருக்கம் ஏற்பட்டு டேட்டிங் செய்தார்.
அது ஒரு கட்டத்தில் பிரேக் அப் ஆனது. அதன்பின், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க படத்தில் ஷாம் சினேகாவின் உதடை கடித்து விட்டதாக சர்ச்சைக்குள்ளானது. பம்மல் கே சம்பந்தம் படத்தில் இளம் காதலர்களாக சினேகா மற்றும் அப்பாஸ் இருவரும் சேர்ந்து நடித்தனர்.
பிறகு நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்து, டேட்டிங் செய்தனர். இந்த செய்தி அப்போது இணையத்தில் பெரிதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இருவரும் பிரிந்து விட்டனர்.