3வது மாடியில் பிராங்க் செய்து விளையாடிய பெண்கள் - இறுதியில் நேர்ந்த சோகம்!
பெண் ஒருவர் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் கட்டிடத்தின் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மும்பை அருகேயுள்ள டோம்பிவலியில் 'குளோப் ஸ்டேட்' கட்டிடத்தில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பெண் நாகினா தேவி மஞ்சிரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் கட்டிடத்திலிருந்து விழுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விபத்து மரண அறிக்கையை (ADR) பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
பிராங்க்
முதற்கட்ட விசாரணையில், நாகினா தேவி தனது நண்பர்களுடன் கட்டிடத்தின் 3வது மாடியில் பிராங்க் செய்து விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளார். அவரது நண்பர் ஒருவர் அதே சம்பவத்தில் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இவை அங்கு பொருத்தப்பட்டிருந்த அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.