மோடியை போல இருக்காதீங்க...எதிரா நில்லுங்க!! கோரிக்கை வைத்த பிரகாஷ் ராஜ்!!

Prakash Raj Telugu Desam Party Narendra Modi Pawan Kalyan
By Karthick Jun 07, 2024 05:24 AM GMT
Report

ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோருக்கு பிரகாஷ் ராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்

மோடி நாட்டின் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர், சமூகஆர்வலரான பிரகாஷ் ராஜ்.

Prakash raj modi

அண்மையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மீட்டிங்கில் பேசும் போது கூட, மோடி தெய்வ குழந்தை இல்லை, டெஸ்ட் டியூப் பேபி என கடுமையாக விமர்சித்தார்.

தெய்வ மகன் இல்ல - டெஸ்ட் டியூப் பேபி!! விளாசி தள்ளிய பிரகாஷ் ராஜ்

தெய்வ மகன் இல்ல - டெஸ்ட் டியூப் பேபி!! விளாசி தள்ளிய பிரகாஷ் ராஜ்

தமிழகத்தை போலவே ஆந்திர மாநிலத்திலும் கணிசமான பிரபலத்தை கொண்டுள்ள பிரகாஷ் ராஜ் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மோடி போலில்லாமல் 

அதில், பவன் கல்யாண் மற்றும் சந்திரபாபு நாயுடு காரு, உங்கள் வரலாற்று வெற்றிக்கு வாழ்த்துக்கள் . உங்கள் இருவரையும் நான் தனிப்பட்ட முறையில் சில காலமாக அறிந்திருக்கிறேன், நீங்கள் இருவரும் உங்கள் கூட்டாளியைப் போலல்லாமல் மதச்சார்பற்ற தலைவர்கள் என்று நான் நம்புகிறேன்.

ChandraBabu Naidu - Modi - Pawan Kalyan

அதிகாரமளிக்கும் ஆணை மற்றும் தேசிய அரசியலில் உங்களின் செல்வாக்கு ஆகியவற்றுடன்.. ஆந்திரப் பிரதேசத்திற்கு மிகவும் தேவையான நீதியை உறுதி செய்யும் பொறுப்பு உங்களுக்கு மட்டும் இல்லை.. நமது தேசத்தை பாதித்துள்ள வகுப்புவாத மற்றும் துருவமுனைக்கும் அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. உங்கள் இருவரையும் நான் அறிவேன், நீங்கள் எங்களை வீழ்த்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.