தெய்வ மகன் இல்ல - டெஸ்ட் டியூப் பேபி!! விளாசி தள்ளிய பிரகாஷ் ராஜ்
விருது விழா
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, இந்த ஆண்டிற்கான விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ்ஜிற்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்தார். அவர் பேசியதில் சில கருத்துக்கள் வருமாறு,
ஒரு சர்வாதிகாரி ஒரு புஷ்பக விமானத்தில் வருவாரு, அவருக்கு மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நின்று பூ தூவுவார்கள். அவருக்கு எப்படி மக்களின் பசி புரியும். மக்களின் வியர்வையை தொடாதவன் புரியுமா?
அவர் தெய்வ மகன் கிடையாது - டெஸ்ட் டியூப் பேபி அவன். அவரை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல. இந்த 10 வருட காலமாக அவர் பல இடங்களில் தனது விதையை விதைத்திருக்கிறார் அல்லவா.
நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று ஓய்வுபெறும் போது ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சொல்கிறார், அவர் நீதிபதியாக இருக்கும் போது எந்த வகையிலான தீர்ப்புகளை கொடுத்திருப்பார் என்று நமக்கு தெரியாதா?
தொடர்ந்து பேசிய அவர், தனக்கு அரசியலில் நீண்ட அனுபவம் இல்லை என குறிப்பிட்டு, ஒரு கலைஞன் சாதாரண குடிமகன் எப்போதும் எதிர்க்கட்சியாக செயல்படவேண்டும் என்றார்.