காந்திய சுட்டவங்க இப்படி தான் இருப்பாங்க..!! சூர்யா விவகாரம்...மத்திய அரசை விளாசிய பிரகாஷ் ராஜ்..!!
ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது கிடைக்காததற்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகரும் அரசியல் விமர்சகருமான பிரகாஷ் ராஜும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்
ஜெய் பீம் படம்
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம் "ஜெய் பீம்". உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான இந்த படம் OTT தளத்தில் வெளியான நிலையில், மிகுந்த பாராட்டுகளை பெற்றது.
தேசிய விருதிற்கு இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் சில தினங்கள் முன்பு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் ஜெய் பீம் படம் முழுமையாக ஒதுக்கப்பட்டது. இதற்கு ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், சுசீந்திரன், நானி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
பிரகாஷ் ராஜ் அதிருப்தி
பலரும் இந்தாண்டிற்கான தேசிய விருதுகள் குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகரும் பாஜக எதிர்பாளரும், அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தனது ஆதங்கத்தை சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் 'ஜெய்பீம்' திரைப்படத்துக்கு எப்படி விருது தருவார்கள்? #Justasking" என பதிவிட்டுள்ளார்.
the ones who support murder of our Mahathma.. the ones who want to change Babasahebs Constitution..
— Prakash Raj (@prakashraaj) August 26, 2023
will they CELEBRATE #JaiBhim ??? #justasking pic.twitter.com/QmTdI7EGPY