நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளார்.. அவரோட ஈகோவை அடக்கிய மக்களுக்கு நன்றி - மோடியை சாடிய பிரகாஷ் ராஜ்!

Prakash Raj Narendra Modi Lok Sabha Election 2024
By Sumathi Jun 05, 2024 05:18 AM GMT
Report

பிரதமர் மோடியை பிரகாஷ் ராஜ் மறைமுகமாக சாடியுள்ளார்.

தேர்தல் ரிசல்ட்

2024 லோக்சபா தேர்தலில் 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

modi - prakash raj

இதில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், சக்ரவர்த்தி நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இப்போது தனித்து நடக்க முடியாது. அவருக்கு யாராவது உதவி செய்தால் மட்டுமே நடக்க முடியும்.

ரயில்வே, உள்துறை, நிதித் துறைக்கு அடிப்போடும் நாயுடு? முழிக்கும் பாஜக - இனிதான் சிக்கலே..

ரயில்வே, உள்துறை, நிதித் துறைக்கு அடிப்போடும் நாயுடு? முழிக்கும் பாஜக - இனிதான் சிக்கலே..

 பிரகாஷ் ராஜ் சாடல்

I.N.D.I.A கூட்டணிக்கும் அவர்களுக்கு வாக்களித்த பொறுப்பான நாட்டு மக்களுக்கும் நன்றி. அவரது (பிரதமர் மோடி) ஈகோவை உடைத்து, அவரது இடத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியதற்காக நன்றிகள். இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் போராடுவோம், இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் உடனிருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது கவனம் பெற்று வைரலாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் நடைபெற்ற காலங்களில் பிரதமரை மிகவும் காட்டமாக பிரகாஷ் ராஜ் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.