விவாகரத்தால் அவ்வளவு மன அழுத்தம்; எந்த உறவுமே.. பிரகாஷ் ராஜ் முதல் மனைவி வேதனை!
பிரகாஷ் ராஜ் முதல் மனைவி விவாகரத்து குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி லலிதா. இவர் மனதில் உறுதி வேண்டும், மாப்பிள்ளை, புலன் விசாரணை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1994ல் பிரகாஷ் ராஜை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். திருமணத்திற்கு பின் பொதுவெளியில் தலைக்காட்டாத இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில்
பிரகாஷ்ராஜ் கீதா மேடம் மூலமா பாலசந்தர் சாரை பார்க்க வந்திருந்தார் அப்போது தான் அவரை பார்த்தேன். அப்போ, அவர் சாந்திகா கூட நடித்திருந்தார். அப்போது பழக்கமாகி, 3 மாதத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. டூயட் படம் முடிந்ததும் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பூஜா, மேக்னா என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
முதல் மனைவி பேட்டி
நாங்கள் இருவரும் 16 வருசம் ஒன்றாக வாழ்ந்தோம். எங்களுக்குள் சின்ன விரிசல் வந்தது. இரண்டு பேருமே உட்கார்ந்து பேசி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்தது தான். இனி இதைபற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. விவாகரத்திற்கு பிறகு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன்.
அப்போது என் அக்கா, அண்ணன் என என் குடும்பத்தினர் என்னுடன் இருந்தனர். அது மட்டுமில்லாமல் என் இரண்டு மகள் என் கூட இருந்தது எனக்கு மிக்பெரிய பலமாக இருந்தது. இதுதான் வாழ்க்கை என்று முடிவு செய்து விட முடியாது.
ஏன் என்றால், இந்த உலகத்திற்கு தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போக போகிறோம். இதன் இடைப்பட்ட காலத்தில் வரும் எந்த உறவும் நிலையானது இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.