இந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜின் பதிலடி!

Prakash Raj Amit Shah India
By Jiyath Sep 15, 2023 06:23 AM GMT
Report

இந்தி மொழி குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதில் அளித்துள்ளார். 

அமித்ஷா

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் "இந்தியா, பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய இந்த ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது.

இந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. அமித்ஷாவின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜின் பதிலடி! | Prakash Raj Response To Amit Shahs Hindi Comment

நாட்டின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்தினால் மட்டுமே வலிமையான நாடு உருவாகும். இந்தி ஒருபோதும் மற்ற இந்திய மொழிகளுடன் போட்டி போடவில்லை. விடுதலை போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. பல மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட இந்தியாவில் ஒற்றுமை உணர்வைத் தூண்டியது' என்று தெரிவித்திருந்தார்.

பிரகாஷ் ராஜ் 

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் "'நீங்கள் இந்தி பேசுகிறீர்கள், ஏனென்றால் அது உங்களுக்குத் தெரிந்த ஒரே மொழி,

உங்களுக்குத் தெரிந்த ஒரே மொழி என்பதால் நான் இந்தி பேசுகிறேன், நாம் இருவரும் ஒன்றா?" என்று பதிவிட்டுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.