பாலியல் வழக்கு - பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிக்கிய மிக முக்கிய ஆதாரம்!
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கின் முக்கிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு கர்நாடக தேர்தலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.எதிர்க்கட்சிகள், பெண்கள் அமைப்புகள் என பலரும் கடும் போராட்டங்களை நடத்திய நிலையில்,
கர்நாடக அரசு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.தேர்தலில் வாக்களித்த உடனே ஜெர்மனி நாட்டிற்கு பிரஜ்வல் ரேவண்ணா தப்பிவிட்டதாக கூறப்பட்டது. அவருக்கு இரண்டு முறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பாலியல் வழக்கு
அவர் இந்தியா வரவுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.அப்போது , பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை எஸ்ஐடி அதிகாரிகள் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரிடம் நீதிமன்றம் அளித்த கைது வாரண்டின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து இருந்தனர்.அதில் இந்த வழக்கில் முக்கிய ஆதாரம் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரங்கள் பற்றி அந்த வீட்டில் வைத்தே பிரஜ்வல் இடம் போலீசார்
விசாரித்து வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இதற்காக கம்ப்யூட்டர், பிரிண்டரையும் போலீசார் எடுத்து சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.பின்னர் பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த செல்போன் காணாமல் போய் விட்டதாகவும்,
முக்கிய ஆதாரம்
அதுபற்றி போலீசில் புகார் அளித்திருப்பதாகவும் மட்டுமே பிரஜ்வல் கூறினார். நேற்று முன்தினம் கூட செல்போன் குறித்து போலீசார் விசாரித்த போது, செல்போன் காணாமல் போன பின்பு தான் செல்போனே பயன்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். தனது கார் டிரைவர்,
கட்சி தொண்டர்களிடம் இருந்தே செல்போனை வாங்கி பேசியதாக பிரஜ்வல் ரேவண்ணா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் அந்த செல்போன் முக்கியமான சாட்சி ஆதாரம் என்பதால், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டில் பதுங்கிய போது, அவரது காதலி தான் பண உதவி செய்திருப்பதால், அவரிடமும் விசாரித்து தகவல்களை பெறும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.