பிரஜ்வல் ரேவண்ணா; தாயையே பாலியல் வன்கொடுமை செய்தார்- பெண் பரபரப்பு புகார்!
பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் மற்றும் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் தற்போதைய மக்களவை வேட்பாளரான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், பிரஜ்வல் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவற்றை வீடியோ பதிவு செய்த விவகாரம் வெளியாகி, கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க பலர் வலியுறுத்திவருகின்றனர்.
பிரஜ்வால் எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். பல பெண்களைக் கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆபாச வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
பரபரப்பு புகார்
பின்னர், ரேவண்ணா வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர், ரேவண்ணா தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்வைத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.தொடர்ந்து அவர் பேரில் அடுக்காக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் கண்ணீர் மல்க போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் எனது தாயை பிரஜ்வல், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் பலாத்காரம் செய்தனர். மேலும் பிரஜ்வல், வீடியோ காலில் அழைத்து என் ஆடைகளை கழற்றும்படி கேட்பார்.
நான் மறுத்தபோது, என்னையும், என் தாயையும் மிரட்டினார். என் அம்மா ஒத்துழைக்காவிட்டால், கணவரின் வேலையை பறித்து விடுவேன் என்றும், மகளை பலாத்காரம் செய்துவிடுவேன் என்றும் பிரஜ்வல் மிரட்டினார்.
தொடர்ந்து பாலியல் தொல்லையும், மிரட்டல்களும் அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் நாங்கள் எங்கள் செல்போன் எண்ணை மாற்றினோம். எனது தாயை அடிமைப் போன்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.எனது தந்தையையும் தாக்கினர். பிரஜ்வல் வீட்டில் வேலை செய்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுவரை 3 பெண்கள் மட்டுமே தைரியமாக வெளியே வந்து புகார் தெரிவித்துள்ளனர்.