பாலியல் புகார்; ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏ ரேவண்ணாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
பாலியல் புகார்
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் மற்றும் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் தற்போதைய மக்களவை வேட்பாளரான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவற்றை வீடியோ பதிவு செய்த விவகாரம் வெளியாகி, கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.பிரஜ்வல் ரேவண்ணா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். பல பெண்களைக் கட்டாயப்படுத்தி அல்லது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆபாச வீடியோக்கள் இவரால் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
ரேவண்ணா
பின்னர், ரேவண்ணா வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர், ஹோலேநரசிப்பூர் தொகுதியின் எம்எல்ஏவான எச்.டி. ரேவண்ணா 2019 முதல் 2022 வரையிலான 3 ஆண்டுகளில் பல முறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை முன்வைத்தார்.இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தற்போது அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். தன் மீதான புகாரில் உண்மை எதுவும் இல்லை. இது ஒரு பெரிய அரசியல் சதி. தனக்கு எதிராக சதித் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளது என்று ரேவண்ணா கூறியுள்ளார். இந்த நிலையில், ரேவண்ணாவுக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய முக்கிய உறுப்புகள் சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகளுடன் அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.