பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை
ஹசன் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை
பிரஜ்வல் ரேவண்ணா
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
அங்கு ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண் உட்பட சில பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
பிரஜ்வல் கைது
பாஜகவின் கூட்டணி கட்சியில் இருப்பதால் எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து போராடின. இதனால் பிரஜ்வல் மதசார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதே போலவே, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாலை 1.30 மணியளவில் வந்த நிலையில், அவரை எஸ்ஐடி அதிகாரிகள் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரிடம் நீதிமன்றம் அளித்த கைது வாரண்டின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
தற்பொழுது பிரஜ்வல் ரேவண்ணா ஹசன் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்