உலகிலேயே வசதியான நகரம்; குறைந்த செலவில் ஆடம்பர வாழ்க்கை - எங்க தெரியுமா

Spain Portugal
By Sumathi Mar 26, 2023 07:47 AM GMT
Report

உலகின் மிகவும் வசதியான நகரமாக பிராக் இடம் பிடித்துள்ளது.

வசதியான நகரம்

நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய நகரங்களை ஸ்வீடனின் ஆம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த ஒரு இணையதளம் ஆராய்ந்து பட்டியலிட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்து சுமார் 117 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உலகிலேயே வசதியான நகரம்; குறைந்த செலவில் ஆடம்பர வாழ்க்கை - எங்க தெரியுமா | Prague Tops The Swedish List For Best Cities

அதில், உலகின் மிகவும் வசதியான நகரமாக செக் குடியரசு நாட்டின் தலைநகரமான பிராக் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்திருந்த போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த லிஸ்பன் தற்போது 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தில் ஸ்பெயினின் செவில்லே உள்ளது.

பிராக் 

பிராக், குறைந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை, கிரியேட்டிவ் சுதந்திரம், இணையவசதி என அனைத்திலும் முன்னேறி உள்ளது. கலாச்சார செழுமை கொண்ட இந்த நகரம் "நூறு கோபுரங்களின் நகரம்" எனவும் அழைக்கப்படுகிறது.

உலகிலேயே வசதியான நகரம்; குறைந்த செலவில் ஆடம்பர வாழ்க்கை - எங்க தெரியுமா | Prague Tops The Swedish List For Best Cities

அதுமட்டும் அல்லாமல், தாய்லாந்தின் சியாங் மை, பேங்காக் பாலி ஆகிய இடங்களை விட சுத்தம், பாதுகாப்பு, பேச்சு சுதந்திரம், பொதுப் போக்குவரத்து, தரமான காபி, உணவு என அனைத்து விஷயங்களிலும் பிராக் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கு, சுமார் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். 1992 முதல் இந்நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் உள்ளது.