இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தமிழகம் வருகை - உற்சாகமாக வரவேற்ற மக்கள்!

Chess Tamil nadu India
By Vinothini Aug 30, 2023 06:38 AM GMT
Report

சதுரங்கம் உலக போட்டியில் கலந்துகொண்டு தமிழகம்ன் திரும்பிய பிரக்ஞானந்தாவை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

செஸ் உலக போட்டி

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) நடத்திய 10வது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30 அன்று தொடங்கி அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்த என்ற சிறுவர் போட்டியின் இறுதி சுற்று வரை சென்றார். இறுதியில் நார்வே நாட்டை சேர்ந்த கார்ல்சன் என்பவருடன் மோதிய பிரக்ஞானந்தா செஸ் இறுதிப் போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது.

pragnananda-young-chess-master-returned-tamilnadu

அதன்பிறகு இரண்டாம் சுற்று நடந்தது அதுவும் டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற செஸ் டை பிரேக்கர் சுற்றில் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா வீழ்ந்த நிலையில், நார்வே நாட்டின் கார்ல்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தமிழகம் திரும்பிய பிரக்ஞானந்தா

இந்நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வந்தன. இதில் போட்டிகளை முடித்துவிட்டு அஜர்பைஜானின் பாகுவில் இருந்து தற்போது தமிழகம் திரும்பியுள்ளார் பிரக்ஞானந்தா.

pragnananda-young-chess-master-returned-tamilnadu

தற்பொழுது சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரக்ஞானந்தா தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.