செஸ் விளையாட தெரியாது; அந்த டைம்ல அவன் கண்ணை பார்க்கவே மாட்டேன் - பிரக்ஞானந்தா தாய் உருக்கம்!
பிரக்ஞானந்தாவின் தாய் சில தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
பிரக்ஞானந்தா
உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து, பிரக்ஞானந்தா அடுத்து இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) இன்று மோதினார்.
தாய் உருக்கம்
அந்த ஆட்டமும் ட்ராவில் முடிந்தது. அவரின் அம்மா நாகலட்சுமி தற்போது உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு காலை 10 மணி முதல் 7 மணி வரை பயிற்சி இருக்கும். அதன்பின் 3 முதல் 4 மணி நேரத்திற்கான வீட்டுப்பாடங்கள் அளிக்கப்படும். அதன்பின் வீட்டு வேலைகளை முடிக்கவே நள்ளிரவாகிவிடும்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், செஸ் விளையாட்டு கற்றுக் கொள்வதற்கான நேரம் கிடைக்கவில்லை. அதேபோல் ஒருமுறை செஸ் போட்டியின் போது பிரக்ஞானந்தாவின் கண்களை மட்டுமே எப்போதும் பார்க்கவே மாட்டேன். நான் என்ன உணர்கிறேன் என்பதை பிரக்ஞானந்தாவிற்கு தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன்.
உணர்வுகளை வெளிக்காட்ட கூடாது என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும், அவர் கண்களை பார்த்து என்ன உணர்கிறார் என்பதை என்னால் சொல்ல முடியும். அதுதான் அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ளாததற்கு காரணமாக உள்ளது. என்னுடைய மகன், மகள் இருவருக்கும் தேவையான அனைத்தையும் செய்துக் கொடுப்பதே என் பணி எனத் தெரிவித்துள்ளார்.