சொந்த மண்ணிலேயே உலகின் நம்பர் 1 வீரரை மண்ணை கவ்வ வைத்த பிரக்ஞானந்தா!!
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.
செஸ்
செஸ் விளையாட்டில் 9ஆவது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகின்றது. அமெரிக்காவில் இரண்டு போட்டியும், போலந்து, குரோஷியா, ருமேனியா ஆகிய நாடுகளில் ஒரு போட்டியும் என மொத்தமாக 5 போட்டிகள் நடைபெறும்.
இந்த போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார். இதில், ஒரு சுற்று போலந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த போட்டிகள் நார்வே நாட்டில் நடைபெற்றன.
இது உலக சாம்பியன் கார்ல்சன் சொந்த நாடாகும். இந்த போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீரர் மற்றொருவருடன் இருமுறை மோதவேண்டும்.
பிரக்ஞானந்தா வெற்றி
நேற்று (29.05.2024) நடைபெற்ற போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான கார்ல்சன் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதுடன் 5.5 புள்ளிகளை பெற்ற பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக கார்ல்சனை அவரது சொந்த நாடான நார்வேயில் வைத்தி பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார் என்பது இதில் கூடுதல் சிறப்பாகும்.