உலக சாம்பியன் கார்லசனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
இந்தியாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக சாம்பியனான கார்லசனை வீழ்த்தியுள்ளார்.
செஸ்
செஸ் விளையாட்டில் 9ஆவது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகின்றது. அமெரிக்காவில் இரண்டு போட்டியும், போலந்து, குரோஷியா, ருமேனியா ஆகிய நாடுகளில் ஒரு போட்டியும் என மொத்தமாக 5 போட்டிகள் நடைபெறும்.
இந்த போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார். கடந்த 8 ஆம் தேதி முதல் போலந்து நாட்டில் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாயாவை சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.
பிரக்ஞானந்தா வெற்றி
நேற்றைய போட்டியில் உலக சாம்பியனான கார்ல்சனை இந்தியாவை சேர்ந்த பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார். இப்போட்டியில் தோல்வியடைந்தன் மூலம், 18 புள்ளிகள் குறைந்து கார்ல்சன் பட்டியலில் 2-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 3 ஆம் இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரரான அர்ஜூன் ஏர்காசி 14 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறார். சீனாவைச் சேர்ந்த Wei Yi 20.5 புள்ளிகளோடு முதலிடத்துக்கு முன்னேறினார்.