தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் !! சாதனையில் அசத்தும் பிரக்ஞானந்தா - வைஷாலி!!
இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டரும், தமிழ்நாட்டின் முதல் கிராண்ட்மாஸ்டரான வைஷாலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
வைஷாலி
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் 2023 IV Elllobregat Open போட்டியில் இரண்டு தொடர் வெற்றிகளின் மூலம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார் வைஷாலி. இதன் மூலம், இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டராகவும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் முதல் தமிழ் பெண் என்ற உயரிய அந்தஸ்தையும் வைஷாலி பெற்றுள்ளார்.

14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன் பட்டத்தை வைசாலி வென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் இவர் பன்னாட்டு சதுரங்க மாஸ்டராக (Woman International Master (WIM) )இருந்து வருகிறார்.

 முதல் முறையாக செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற முதல் உடன் பிறந்த ஜோடி என்ற சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த அக்கா தம்பியான வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா ரமேஷ் பாபு நிகழ்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.    
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    