ரூ.777 கோடி; 2 வருஷம் கூட முடியல.. அதற்குள் விரிசல் - பிரதமர் மோடி திறந்த வைத்த சுரங்கப்பாதை!
சுரங்கச்சாலையில் இரண்டு ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே விரிசல் ஏற்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை விரிசல்
டெல்லி, பிரகதி மைதானம் அருகே ரூபாய் 777 கோடி செலவில் புதிதாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு கடந்த 2022 ம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சுரங்கச் சாலை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் கூட இன்னும் இன்னும் முடியாத நிலையில் அதன் மேற்கூறையில் விரிசல் விழுந்துள்ளது. மேலும், தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
பொதுப்பணித்துறை நோட்டீஸ்
தொடர்ந்து, இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை, இந்த சுரங்கச் சாலையை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை. இதை முற்றிலும், சீரமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எனவே இந்த பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று சுரங்கப்பாதையை கட்டிய எல்&டி நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சுரங்கப்பாதை திறந்து வைக்கப்படும்போது உலக தரத்தில் கட்டப்பட்டிருப்பதாகவும், தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம், தானியங்கி வடிகால் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட அம்சங்களும் இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.