ஒருவழியா தீர்வு கிடைச்சாச்சு; டிராபிக்கை சமாளிக்க இனி சுரங்கபாதை - இதுதான் ரூட்!

Bengaluru
By Sumathi Oct 07, 2023 04:35 AM GMT
Report

போக்குவரத்து நெரிசலை குறைக்க 190 கிமீ சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் செய்தியாளர்காளைச் சந்தித்தார். அப்போது, “பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 190 கிமீ நீள சுரங்கப்பாதை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஒருவழியா தீர்வு கிடைச்சாச்சு; டிராபிக்கை சமாளிக்க இனி சுரங்கபாதை - இதுதான் ரூட்! | 190 Km Road Subway Tunnel Planned For Bengaluru

அதற்கு 8 நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் அறிக்கையை சமர்ப்பித்து 45 நாட்களுக்குள் பொது டெண்டர்களை விட தயாராகி வருகிறோம். சுரங்கப்பாதை எப்படி இருக்க வேண்டும்.

சுரங்கப்பாதை

நான்கு அல்லது ஆறு வழிச்சாலையாக இருக்க வேண்டுமா, எங்கிருந்து துவங்கி எங்கு முடிய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து இந்த நிறுவனங்கள் அறிக்கை அளிக்கும். மேலும், நகர் முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும்” தற்போதைக்கு 190 கி.மீ. முன்பொழியப்பட்டுள்ளது.

ஒருவழியா தீர்வு கிடைச்சாச்சு; டிராபிக்கை சமாளிக்க இனி சுரங்கபாதை - இதுதான் ரூட்! | 190 Km Road Subway Tunnel Planned For Bengaluru

பெல்லாரி சாலை, பழைய மெட்ராஸ் சாலை, எஸ்டீம் மால் சந்திப்பு முதல் மேக்ரி சர்க்கிள் வரை, மில்லர் சாலை, சாளுக்கிய சர்க்கிள், டிரினிட்டி சர்க்கிள், சர்ஜாபூர் சாலை, ஓசூர் சாலை, கனகபுரா சாலை முதல் கிருஷ்ணாராவ் பூங்கா வரை, மைசூர் சாலையிலிருந்து சிர்சி சர்க்கிள், மகடி சாலை, துமகுரு சாலையிலிருந்து யஷ்வந்த்பூர் சந்திப்பு வரை, வெளிவட்ட சாலை, கோரகுண்டேபாளையம், கே.ஆர்.புரம், சில்க் போர்டு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இனி போக்குவரத்து நெரிசலுக்கு வரி - லண்டனை அடுத்து இங்கயும்..!

இனி போக்குவரத்து நெரிசலுக்கு வரி - லண்டனை அடுத்து இங்கயும்..!

இந்த பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்துவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.