போக்குவரத்து நெரிசல் - காரை விட்டுவிட்டு 3 கிலோ மீட்டர் ஓடி நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்

Viral Video
By Nandhini Sep 13, 2022 05:12 AM GMT
Report

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அறுவை சிகிச்சை மருத்துவர், காரை அப்படியே விட்டுவிட்டு 3 கிலோமீட்டர் ஓடிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

3 கிலோ மீட்டர் தூரம் ஓடிய டாக்டர்

நேற்று டாக்டர் கோவிந்த் நீண்ட காலமாக பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்ட நடுத்தர வயதுப் பெண்ணுக்கு லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், டாக்டர் கோவிந்த் வந்த கார் பெங்களூர் போக்குவரத்து நெரிசல் சிக்கிக்கொண்டது. நோயாளின் உயிரை காப்பாற்ற டாக்டர் கோவிந்த் ஒரு நொடி கூட யோசிக்காமல், தனது காரை டிரைவருடன் விட்டுவிட்டு, அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனைக்கு 3 கிலோ மீட்டர் ஓடினார்.

நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தத் தயாராக இருந்த டாக்டர் கோவிந்தின் குழு, அவர் அறுவை சிகிச்சை அரங்கை அடைந்தவுடன் செயலில் இறங்கியது. சிறிதும் தாமதிக்காமல், மருத்துவர் ஸ்க்ரப் செய்து, அறுவை சிகிச்சை செய்ய அறுவை சிகிச்சை உடையில் இறங்கினார். அறுவை சிகிச்சை சரியான நேரத்தில் நன்றாக முடிந்தது. அதன் பிறகு நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இது குறித்து டாக்டர் கோவிந்த் கூறியதாவது -

அறுவைசிகிச்சை தாமதமாகியிருந்தால் அப்பெண்ணுக்கு அடிவயிற்றில் கடுமையான வலியை ஏற்படுத்தியிருக்கும். நான் ஒவ்வொரு நாளும் மத்திய பெங்களூரிலிருந்து பெங்களூரின் தென்கிழக்கில் உள்ள சர்ஜாபூரின் மணிபால் மருத்துவமனைகளுக்குப் பயணம் செய்கிறேன்.

அறுவை சிகிச்சைக்காக சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன். நான் மருத்துவமனைக்கு வந்தவுடன் அறுவை சிகிச்சை செய்ய எனது குழு தயாராகி விட்டது. அதிக போக்குவரத்து நெரிசலை பார்த்து, காரை டிரைவரிடம் விட்டுவிட்டு மருத்துவமனையை நோக்கி ஓடினேன் என்றார்.

doctor-run-3-kilometers-bangalore-traffic

வைரலாகும் வீடியோ

அறுவை சிகிச்சை செய்வதற்காக டாக்டர் ஓடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டாக்டரின் இந்த செயலுக்கு பலர் பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.