சென்னையில் இதனால்தான் மழைநீர் தேங்குகிறது - காரணத்தை விளக்கிய பிரதீப் ஜான்!
சென்னையில் மழைநீர் தேங்குவாதற்கான காரணத்தை பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
மழைநீர்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து உள்ளது. நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து சென்னைக்கு இன்று(15.10.2024) கொடுக்கப்பட்டிருந்த ஆரஞ்சு அலெர்ட் ரெட் அலெர்டாக மாற்றப்பட்டுள்ளது. முன்னதாகவே நாளைக்கு (16.10.2024) ரெட் அலெர்ட் வழங்கப்பட்டிருந்தது.
இந்த மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்ன என்று வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "சென்னையில் பெய்யும் மொத்த மழையும் எண்ணூர்,
பிரதீப் ஜான்
நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் ஆகிய 4 வழிகளில் மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் சென்னையில் ஒரு நாள் நீர் தேங்கும்.
30 செ.மீ மழை பெய்தால் சென்னையின் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.
40 செ.மீ மழை பெய்தால் சென்னையில் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது.
40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்" என்று கூறியுள்ளார்.85