பாத்ரூமில் தேவையில்லாத வேலை..? ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியேற்றம்??

Karthick
in தொலைக்காட்சிReport this article
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பான போட்டியாளராக கருதப்படும் பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப்
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பான போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான். ஸ்ட்ராட்டர்ஜி ஸ்ட்ராட்டர்ஜி என இவர் செய்யும் பல வேலைகளை செய்யும் காரணத்தால் ரசிகர்களிடம் இருவேறு விமர்சனங்களை பெற்று வருகின்றார்.
ஒரு புறம் இவரை சிலர் புகழ்ந்து பேசி வந்தாலும், மறுபுறம் இவரை பலரும் விமர்சித்தே வருகின்றனர். நடிகராக பரிட்சயமான பிரதீப், கவின் பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த சீசன் துவங்கியது முதலே பல சர்ச்சைகளை மேற்கொண்டு வந்த பிரதீப், தற்போது ரெட் கார்டு வங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதற்கு பல காரணங்களும் கூறப்படுகிறது. பூர்ணிமா, ஜோவிகா, ரவி,மணிகண்டன், நிக்சன் மற்றும் ரவீனா தாஹா என பிக் பாஸ் வீட்டில் உள்ள பலர் கையில் செங்கோடியை ஏந்திக் கொண்டு பிரதீப்புக்கு எதிராக புகார் அளித்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ரெட் கார்டு
சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதமும் தொடர்ந்து பேசி வரும் எல்லை மீறிய வார்த்தைகள் போன்றவற்றால் சர்ச்சையைக் கிளப்பியதன் காரணமாகவும் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அவர் ஒருமுறை பிரதீப் பிக் பாஸ் வீட்டின் கழிப்பறையில் கதவை மூடாமலே உள்ளே இருந்தார் என்று மணி கமலிடமே புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.