உலக சாதனை என அழைத்து வெயிலில் சிறார்களை காயவிட்ட பிரபுதேவா!! கலவரமான நிகழ்ச்சி
நடிகர், நடன கலைஞர், இயக்குநர் என இந்திய சினிமாவில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றார் பிரபுதேவா. ஷங்கரின் "காதலன்" படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமடைந்த பிரபுதேவா அதனை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தார்.
எண்ணற்ற வெற்றி படங்களில் நாயகனாக நடித்து வந்த பிரபுதேவா, 2005-ஆம் ஆண்டு தெலுங்கில் நுவ்வோஸ்தானந்தே நேனோடந்தனா(தமிழில்- உனக்கும் எனக்கும்) என்ற படத்தின் மூலம் இயக்குநராகினார். தமிழில் விஜய்யுடன் அவர் இணைந்த "போக்கிரி" படம் மாபெரும் வெற்றி படமாக மாறியது. அதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் இயக்குநராக வளம் வருகின்றார் பிரபுதேவா.
பல்வேறு பரிணாமங்களில் தொடர்ந்து பயணித்து வரும் பிரபுதேவாவிற்கு தனியார் அமைப்பு ஒன்று சர்வதேச நடன தினத்தை அவருக்கு அர்ப்பணிக்கும் வகையில் நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி என்கிற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.
உலக சாதனை
அதாவது, பிரபு தேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்களில் நடனமாடும் நிகழ்ச்சியான அதனை சென்னை ராஜரத்னம் ஸ்டேடியத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் நிகழ்ச்சி முடிக்கப்பட திட்டமிடப்பட்டு அறிவிப்பு வெளிவந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. 9 மணி ஆகியும் நிகழ்ச்சிக்கு பிரபு தேவா வராததால், நிகழ்ச்சி துவங்கப்படவில்லை.பலரும் வெயிலில் அவதிப்பட்டனர்.
இதன் காரணமாக கோபமடைந்த அங்கிருந்தவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காணொளி கட்சியில் பேசிய பிரபுதேவா தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என விளக்கமும் அளித்துளளார்.