காதலை முறித்து கொண்டது நயன் தான்..!! பிரபுதேவாவை பிரிய இது தான் காரணமா..?
நடிகை நயன்தாரா - நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபுதேவா இருவரும் காதலித்து வந்த செய்திகள் ஒரு காலத்தில் பெரும் தலைப்பு செய்தியாக இருந்தது.
பிரபுதேவா - நயன்தாரா
முன்னணி நடிகையாக வேகமாக முன்னேறி வந்த நயன்தாராவும், அப்போது வெற்றிப்பட இயக்குனராக மாறியிருந்த பிரபுதேவா இருவரும் காதலித்து வருவதாக வெளியான செய்திகள் தான் ஒரு காலத்தில் டாப்.
அதற்கு முக்கிய காரணம், பிரபுதேவா ஏற்கனவே திருமணமானவர் என்பதும், நயன்தாரா ஏற்கனவே சிம்புவுடனான காதலில் தோல்வியடைந்ததும் தான். சில வருடங்கள் நீடித்த பிரபுதேவா - நயன்தாரா காதல் பிறகு பிரிந்தது.
பிரிவின் காரணம்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், படவுலகில் ஒரு கட்டத்தில் தோல்விகளையும் சந்தித்த போது, நயனின் சிம்புவுடனான காதலும் கல்யாணம் வரை சென்று தோல்வி அடைந்தது என்ற பயில்வான், அதற்கு பிறகு அவர் பிரபுதேவாவை காதலித்தார் என்று கூறினார்.
அதில் அதிருப்தி அடைந்த பிரபுதேவாவின் முதல் மனைவி நயன்தாராவை வீட்டிற்கு தேடி வந்து பயங்கரமாக திட்டி, தாக்கினார் போன்றவற்றை கூறிய பயில்வான், நயனின் உறவில் இருந்தாலும் பிரபுதேவா அவரது குழந்தைகளை சென்று பார்த்து வந்து கொண்டிருந்தது நயன்தாராவுக்கு பிடிக்காத காரணத்தால் தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் என்று பேசியுள்ளார்.