ரகசிய திருமணம்? 2வது மனைவியை முதல்முறை வெளியில் அழைத்து வந்த பிரபுதேவா!

Sumathi
in பிரபலங்கள்Report this article
பிரபுதேவா 2வது மனைவியை முதல் முறையாக வெளியில் அழைத்து வந்துள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபுதேவா
நடனம், நடிப்பு, இயக்கம் என பல துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ள பிரபுதேவா கடந்த சில வருடங்களாக நடிப்பிலும் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில், தனது முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து விட்டு நடிகை நயன்தாராவைக் காதலித்து வந்தார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், பிரபுதேவா கொரோனா காலத்தில் மும்பையில் முதுகு வலியால் அவதிப்பட்டபோது பிஸியோதெரபிஸ்ட் டாக்டர் ஹிமானி சிங் என்பவரிடம் சிகிச்சைக்காகச் சென்றார்.
2வது திருமணம்
தொடர்ந்து, அவரையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது முதல் முறையாகத் தனது இரண்டாவது மனைவியுடன் பிரபுதேவா திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி இருக்கிறது.
மேலும், கணவரின் பிறந்தநாளையொட்டி மனைவி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பிரபுதேவா, தன்னை மிகவும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வதாகவும் அவரைத் திருமணம் செய்து கொண்டதற்காகப் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.