“பிரபுதேவா மீது காதல் இருக்கிறது” - பிரபல நடிகை சொன்ன கருத்தால் பரபரப்பு

prabhudeva manjuwarrier
By Petchi Avudaiappan Feb 05, 2022 07:43 PM GMT
Report

நடிகர் பிரபுதேவா மீது அன்றிருந்த காதல் இப்போதும் இருப்பதாக முன்னணி நடிகை மஞ்சு வாரியர் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். 

மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள மஞ்சு வாரியர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் தற்போது இண்டோ - அராபிக் திரைப்படமாக தயாராகி வரும் வாரியர் ஆயிஷா என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

மலையாளம் மற்றும் அரபி இரு மொழியில் இந்த படம் தயாராகி வருகிறது.  இதன் படப்பிடிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் நிலையில் படத்தில் நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றுகிறார்.

இதனிடையே அவர் நடனம் சொல்லிக் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகை மஞ்சு வாரியர் "நான் மம்முட்டி, லாலேட்டன், சோபனா சேச்சி ஆகியோரின் ரசிகை தான். ஆனால் என்னுடைய பால்யத்தில் ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன் என்றால் அது பிரபுதேவாவுக்கு தான்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரபுதேவா மீது இருந்த காதல் தனிப்பட்ட முறையில் என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். அந்த காதல் இப்போதும் இருக்கிறது என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். 

இங்கு அவர் காதல் என்று தெரிவித்திருப்பது அன்பு நட்பு அடிப்படையிலானது எனவும், அதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனவும் மஞ்சு வாரியரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.