பிரபு தேவா முதல் மனைவியை பிரிந்ததற்கு காரணம் இதுதான்? பகீர் தகவல்!
பிரபு தேவா தன் முதல் மனைவியை எதனால் பிரிந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் திருமணம்
நடிகர் பிரபுதேவா 1995ல் மலத் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாட்டால் ரமலத்தை விவாகரத்து செய்தார். இதுகுறித்து பேசியுள்ள பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, சினிமா துறையும் சரி,
வெளி உலகிலும் சரி பிரபு தேவாக்கு ஏகப்பட்ட ப்ரொபோசல்கள் வந்தன. ஆனால் அவர் தனக்கு சினிமா தான் முக்கியம் என்று சொல்லிவிட்டார். இருப்பினும் அவர் குழுவில் நடனமாடிய ஒரு பெண் மீது இவருக்கு காதல் இருந்தது. அந்தப் பெண்ணுக்கும் இருந்தது.
விவாகரத்து
இஸ்லாமிய பெண் என்பதால் அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு ரகசிய திருமணம் நடந்ததாக கூட பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அவரின் ஒரு மகன் இறந்துவிட மனைவி மீது கோபமும், சின்ன சின்ன சண்டைகளும் வந்தன.
அதற்குப் பிறகு தான் விவாகரத்தானது. இவர்களின் விவாகரத்திற்கு முதல் காரணம் இந்து மதத்திற்கு அவரை மாற சொன்னதாக சொல்லப்படுகிறது. அவரும் மாறமாட்டேன் என சொல்லி உறுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் பெரிய விஷயமாக மாறிய நிலையில் இருவரும் சமரசமாக பேசி பிரிந்தனர். அதற்குப் பிறகு பிரபு தேவாவும், நயன்தாராவும் காதலித்தனர். அவரின் பெயரை பச்சை குத்தும் அளவிற்கு வந்துவிட்டது. இடையில் ஏற்பட்ட பிரச்னையால் அவர்கள் பிரிந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.