41 வயதாகியும் கல்யாணம் செஞ்சுக்காத அனுஷ்கா - அந்த நடிகரோட உறவு தான் காரணம்?
41 வயதாகியும் அனுஷ்கா திருமணம் செய்துக் கொள்ளாத காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அனுஷ்கா
நடிகை அனுஷ்கா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சு இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார். எனவே அந்த படத்தில் இருந்தே அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.
அப்படி இருந்தும் கூட அனுஷ்காவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. மேலும் 41 வயதாகியும் அனுஷ்கா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
திருமணம்?
இதற்கிடையில், பாகுபலி உள்ளிட்ட படங்களில் பிரபாஸுடன் நடித்தபோது இருவரும் காதலித்ததாகவும், லிவிங் டூ கெதரில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், திருமணத்திற்கு பிரபாஸ் வீட்டில் க்ரீன் சிக்னல் கிடைக்காததால்
அனுஷ்காவுடனான காதலில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறிவிட்டார் எனவும்; அதனால்தான்
அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என டோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.