கல்யாணமே பண்ணிக்க போவதில்லையா? சூசகம் சொன்ன அனுஷ்கா!
அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்து கொண்டிருந்த சமயத்தில் இஞ்சு இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார். எனவே அந்த படத்தில் இருந்தே அவருக்கு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை.
அப்படி இருந்தும் கூட அனுஷ்காவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. மேலும் 41 வயதாகியும் அனுஷ்கா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
திருமணம்?
இந்நிலையில், பி.மகேஷ்பாபு இயக்கத்தில், நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படத்தில் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், அனுஷ்காவின் அம்மா கேரக்டர், இந்த ஜென்மத்துல அவ கல்யாணம் பண்ணிக்க போவதில்லை என டயலாக் சொல்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா ஒருவேளை கல்யாணமே செய்யபோவதில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.