அனுஷ்கா இல்லை...32 வயது பாலிவுட் நட்சத்திரத்தை டேட்டிங் செய்யும் பிரபாஸ்!! கையில் டாட்டூ பாத்தீங்களா?

Marriage Prabhas Disha Patani Kalki 2898 AD
By Karthick Jul 03, 2024 09:55 AM GMT
Report

இந்திய சினிமாவின் முதல் பான் இந்தியன் ஸ்டார் என்றால் அது பிரபாஸ் தான்.

பிரபாஸ்

தெலுங்கில் முன்னணி நாயகனாக இருந்தவர், பாகுபலி படங்களுக்கு பிறகு, உலகளவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உண்டாக்கி கொண்டார். 2017ஆம் ஆண்டு வெளியான பாகுபலி 2 படம் தான் இது வரை இந்திய படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக உள்ளது.

அவ்வளவு ஏன் தமிழில் வெளியாகி பெரிய வசூலை பெற்ற படம் என்ற சிறப்பையும் பாகுபலி படம் தான் வைத்துள்ளது. பாகுபலிக்கு பிறகு சகோ, ராதே சியாம், ஆதிபுருஷ் போன்ற படங்கள் வெற்றி பெறாமல் ஏமாற்றியது.

அனுஷ்கா இல்லை...32 வயது பாலிவுட் நட்சத்திரத்தை டேட்டிங் செய்யும் பிரபாஸ்!! கையில் டாட்டூ பாத்தீங்களா? | Prabhas Disha Patani Dating News Viral

ஆனால், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வந்த சலார் மற்றும் தற்போது வெளிவந்துள்ள "கல்கி 2898AD" படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகை

44 வயதாகும் பிரபாஸ் திருமணம் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. அவரும் நடிகை அனுஷ்காவும் தீவிரமாக காதலித்ததாகவும், அவர்களுக்கு விரைவில் திருமணம் என்றெலாம் அடிக்கடி செய்திகள் வரும்.

விவாகரத்தான 40 வயதான துபாய் யூடியூபரை திருமணம் செய்யும் சுனைனா? இவர் தான் மாப்பிள்ளையா!!

விவாகரத்தான 40 வயதான துபாய் யூடியூபரை திருமணம் செய்யும் சுனைனா? இவர் தான் மாப்பிள்ளையா!!

ஆனால், இது வரை எந்தவித செய்தியும் இல்லை. தற்போது மற்றுமொரு gossip கிளம்பிவிட்டது. நடிகர் பிரபாஸ் போலவுட்ட் நடிகை திஷா பாதனியை டேட் செய்வதாக கூறப்படுகிறது, காரணம், நடிகை திஷா தனது கையில் PD என்ற டாட்டூவை கொண்டுள்ளார் P பிரபாஸ், D திஷா என ரசிகர்கள் கிளப்பிவிட்டு விட்டார்கள்.

இதற்கு பதிலடி கொடுத்த திஷா பதானி, என் டாட்டூ மீது நீங்கள் காட்டும் ஆர்வத்தான் மகிழ்ச்சி, ஆனால் அது எதற்காக என்று ஆராயுங்கள் என்று கூறியிருக்கிறார் திஷா பதானி.