ஸ்ட்ரெச்சரில் நோயாளி... டார்ச் அடிச்சு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் - அதிர்ச்சி சம்பவம்!

Viral Video Uttar Pradesh
By Sumathi Sep 13, 2022 06:41 AM GMT
Report

மின்வெட்டு காரணமாக டார்ச் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்வெட்டு

உத்திரபிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தின் மருத்துவமனை ஒன்றில் , பெண் ஒருவர் அவசர நிலையில் ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்டார். உடனடியாக பரிசோதிக்க வேண்டிய நிலையில், மின்சாரம் இல்லாததால் மருத்துவர்கள் மொபைல்போனில் இருக்கும் டார்ச் லைட்டை பயன்படுத்தி,

ஸ்ட்ரெச்சரில் நோயாளி... டார்ச் அடிச்சு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் - அதிர்ச்சி சம்பவம்! | Power Cut Doctors Treat Patients Using Torch

அந்த பெண்ணை பரிசோதித்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் காத்திருந்த நோயாளிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மொபைல் டார்ச் விளக்குகளின் கீழ் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டார்ச் லைட்டில் சிகிச்சை

இதுகுறித்து, மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் தலைமைப் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.டி.ராம் கூறுகையில், "மருத்துவமனையில் நாங்கள் பேக் அப்பிற்கு ஜெனரேட்டர்களை எப்போதுமே வைத்திருக்கிறோம்.

ஸ்ட்ரெச்சரில் நோயாளி... டார்ச் அடிச்சு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் - அதிர்ச்சி சம்பவம்! | Power Cut Doctors Treat Patients Using Torch

ஆனால் அதற்கான பேட்டரிகளை நாங்கள் போட்டு வைத்திருப்பதில்லை. ஜெனரேட்டருக்கான பேட்டரிகளைப் பெறுவதில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால்தான் மொபைல் வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டியதாயிற்று.

இந்த பகுதியில் பேட்டரிகள் திருடுபோகும் என்ற அச்சம் எப்போதும் உள்ளது. அதனால்தான் பேட்டரிகளை அகற்றி வைத்துவிடுகின்றனர்“ என்றார். மேலும் இது முதல் சம்பவம், இவ்வாறு மொபைல் டார்ச்சில் சிகிச்சை அளிக்கும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.

இதனால், இந்தியாவில் சுகாதார வசதிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற பல கோரிக்கைகளும் எழுந்த வண்ணம்தான் உள்ளது.