எதே.. டூப்ளிகேட்டா? நாட்டின் மிக உயரமான நீர்வீழ்ச்சி; அம்பலமான உண்மை - வைரல் Video!
இயற்கை எழில் கொஞ்சும் யுண்டாய் நீர்வீழ்ச்சி ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது .
யுண்டாய் நீர்வீழ்ச்சி
சீனாவின் ஹெனான் (Henan) மாகாணத்தில் 314 மீட்டர் உயரமுடைய பிரபல யுண்டாய் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அந்நாட்டின் மிக உயரமான இந்த நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் இயற்கை எழில் கொஞ்சும் யுண்டாய் நீர்வீழ்ச்சி ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது . அந்த அருவி செயற்கையானது என்றும், பெரிய குழாய் மூலமாக நீர் பாய்ச்சப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அங்கு மலையேறச் சென்ற ஒருவர் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டதால் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது.
அதிகாரிகள் விளக்கம்
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், கோடைக்காலத்தில் வறட்சியாக இருக்கும் சூழலில் நீர்வீழ்ச்சி வரண்டுவிடாமல் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அருவியை தேடி வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து விடாமல் இருக்கவும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. நீர்வீழ்ச்சியின் அழகு காலநிலை மாற்றம் காரணமாக குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இது பின்பற்றப்படுகிறது. மற்றபடி அது உண்மையான நீர்வீழ்ச்சி தான்" என்று தெரிவித்துள்ளனர்.
NEW: Chinese officials are forced to apologize after a hiker discovers a secret water pipe feeding China’s tallest waterfall
— Unlimited L's (@unlimited_ls) June 6, 2024
Millions of tourists visit the 1,024-foot-tall Yuntai Mountain Waterfall annually, attracted by its ancient geological formations over a billion years old… pic.twitter.com/mw3u9NK1xN