அரசுக்கு ஆதரவாக இணையத்தில் பதிவிட்டால்..மாதம் ரூ.8 லட்சம் வழங்கப்படும் - அதிரடி அறிவிப்பு!

Government Of India Uttar Pradesh India Social Media
By Swetha Aug 28, 2024 09:56 AM GMT
Report

அரசுக்கு ஆதரவாக இணையத்தில் பதிவிட்டால்..மாதம் ரூ.8 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு

உத்தரபிரதேச பாஜக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் 8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், மாநில தகவல் தொலைத்தொடர்பு துறையாழ் தயாரிக்கப்பட்ட,

அரசுக்கு ஆதரவாக இணையத்தில் பதிவிட்டால்..மாதம் ரூ.8 லட்சம் வழங்கப்படும் - அதிரடி அறிவிப்பு! | Posting Positive About Govt Can Earn 8 Laks In Up

உத்தரபிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024க்கு உ.பி. மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த புது கொள்கையின்படி, எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ, போஸ்ட். ட்வீட், ரீல்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் பாலோயர்கள் அடிப்படையில்

ஆண்டுக்கு 20 லட்சத்திற்கு மேல் சம்பளம் - இதுதான் அந்த டாப் 5 வேலைகள்!

ஆண்டுக்கு 20 லட்சத்திற்கு மேல் சம்பளம் - இதுதான் அந்த டாப் 5 வேலைகள்!

ரூ.8 லட்சம் 

4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.5 லட்சம், 4 லட்சம், 3 லட்சம் மற்றும் 2 லட்சம் வழங்கப்படும். அதேபோல, யூட்யூப் -இல் வீடியோ, ஷார்ட்ஸ் பதிவிடுபவர்களின் சப்ஸ்க்ரைபர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.8 லட்சம், 7 லட்சம், 6 லட்சம் மற்றும் 4 லட்சம் வழங்கப்படும்.

அரசுக்கு ஆதரவாக இணையத்தில் பதிவிட்டால்..மாதம் ரூ.8 லட்சம் வழங்கப்படும் - அதிரடி அறிவிப்பு! | Posting Positive About Govt Can Earn 8 Laks In Up

இது உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும் என கூறப்படுகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக, ஆட்சேபனைக்குரிய செய்திகளை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.