54 வருஷத்துக்குப் பின் டெலிவரி ஆன லெட்டர்; என்ன இருந்தது தெரியுமா - அடடே தகவல்!

France
By Sumathi Jul 27, 2023 07:01 AM GMT
Report

போஸ்ட் கார்டு 54 வருடங்கள் கழித்து, அது சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்துள்ளது.

போஸ்ட் கார்டு 

பேஸ்புக் பயனாளர் ஜெசிக்கா மீன்ஸ் என்பவர் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், "இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க எனக்கு உதவி செய்யுங்கள். இதை தயவுசெய்து ரீபோஸ்ட் அல்லது மீண்டும் ஷேர் செய்யுங்கள்.

54 வருஷத்துக்குப் பின் டெலிவரி ஆன லெட்டர்; என்ன இருந்தது தெரியுமா - அடடே தகவல்! | Postcard Sent In 1969 From Paris Delivered

பல வருடங்கள் கழித்து இந்த போஸ்ட் கார்டு எப்படி எங்கள் வீட்டிற்கு வந்தது என்பதை அறிய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தலாஹசியிலிருந்து 2023-ஆம் ஆண்டில் இந்த போஸ்ட் கார்டை யார் அனுப்பி வைத்திருப்பார்கள் என்பது உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாருக்கேனும் தெரிந்தால் என்னிடம் கூறுங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆச்சர்ய தகவல்

Mr & Mrs Rene Gagnon Or current resident’ என்ற முகவரிக்கு இந்த போஸ்ட் கார்டு மெயில் மூலமாக கிடைத்துள்ளது.

54 வருஷத்துக்குப் பின் டெலிவரி ஆன லெட்டர்; என்ன இருந்தது தெரியுமா - அடடே தகவல்! | Postcard Sent In 1969 From Paris Delivered

மார்ச் 15, 1969-ல் பாரிஸில் இருந்து போஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அந்த கார்டில், அன்பு நண்பர்களே, இந்த லெட்டர் உங்கள் கைக்கு கிடைக்கும் போது நான் வீட்டிலிருந்து வெகு தூரம் சென்றிருப்பேன்.

இந்த கடிதத்தை நான் உங்களுக்கு தற்போது நான் வசிக்கும் டவர் ஈபிஃளில் இருந்து அனுப்புகிறேன். உங்களை பார்க்க கூடிய வாய்ப்பு தற்போது இல்லை என்றாலும், இங்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என எழுதப்பட்டுள்ளது. இந்த தகவல் பலரது கவனம் ஈர்த்துள்ளது.