கையில் 100 ரூபாய் இருந்தால் போதும்.. ரூ.2 லட்சத்துக்கு மேல் கிடைக்கும் - எப்படி தெரியுமா?
100 ரூபாய் சேமித்து ரூ.2 லட்சத்துக்கு மேல் மொத்தமாக கிடைக்கும் சேமிப்பு திட்டம் பற்றி பார்க்கலாம்.
ரூ.2 லட்சம்
போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் ஒரு நிலையான வருமானத்தை வழங்கும் சிறுசேமிப்புத் திட்டமாகும். இதில் குறிபிட்ட தொகையை சேமிப்பதால் கூட்டு வட்டி விகிதம் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
அதன்படி, ஒவ்வொரு மாதமும் நிலையான தொகையை கட்டி, அந்த திட்டம் முதிர்வு அடையும்போது மொத்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதை தொடர விரும்புவர்கள் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
எப்படி தெரியுமா?
இதில் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். இந்த வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்படும். இதனை ஒரு தனி நபர் அல்லது கூட்டுக் கணக்காகவும் திறக்கலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல், வசதிக்கேற்ப எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.
கணக்கு தொடங்கி ஓராண்டு கழித்து, வழங்கிய தொகையில் 50% வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கான வட்டி விகிதம், ரெக்கரிங் டெபாசிட் கணக்கிற்கு வழங்கப்படும் வட்டியை விட 2% கூடுதலாக இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ், தினமும் 100 ரூபாய் சேமித்து ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2.14 லட்சம் முதிர்வுத் தொகை கிடைக்கும். முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,80,000. வட்டி வருவாய் மட்டும் ரூ.34,097 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.