ரூ.1000 முதலீடு செஞ்சாபோதும்..போஸ்ட் ஆபீஸில் பெண்களுக்கு அசத்தல் திட்டம்!

Tamil nadu Government Of India India
By Swetha May 10, 2024 07:53 AM GMT
Report

அஞ்சலகத்தில் குறைந்தபட்ச முதலீட்டில் உள்ள சிறு சேமிப்புத் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சேமிப்பு திட்டம்

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் பெண்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடந்த 2023ம் ஆண்டு துவங்கப்பட்டது. பெண்களின் நிதி சுதந்திரத்தை மையமாகக் கொண்டு அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிறு சேமிப்புத் திட்டமாகும்.

ரூ.1000 முதலீடு செஞ்சாபோதும்..போஸ்ட் ஆபீஸில் பெண்களுக்கு அசத்தல் திட்டம்! | Mahila Samman Savings Scheme

மகிளா சம்மான் பச்சத் பத்ரா என்றும் அழைக்கப்படும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் அஞ்சலகத்தில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளில் கிடைக்கும். சிறு சேமிப்புத் திட்டமான மஹிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மார்ச் 31, 2025 வரை நீடிக்கிறது.

இந்த திட்டத்திற்கு தகுதியான வாடிக்கையாளர்கள் ரூ. 2,00,000 வரை பல கணக்குகளை திறந்துகொள்ளலாம் என்று இந்தியா போஸ்ட் இணையதளம், indiapost.gov.in அறிவித்துள்ளது. பெண்கள் தங்களுக்கெனவோ அல்லது பெண் குழந்தை சார்பாக இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

ரூ.1000 முதலீடு செஞ்சாபோதும்..போஸ்ட் ஆபீஸில் பெண்களுக்கு அசத்தல் திட்டம்! | Mahila Samman Savings Scheme

மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம், மார்ச் 31, 2024 இல் முடிவடையும் காலாண்டில், காலாண்டுக்கு ஒருமுறை 7.5 சதவீதத்தை வழங்குகிறது. அதன்அடிப்படியில் ரூ. 10,000 வைப்புத் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.11,602 ஆக வளரும்.இதில் கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடைகிறது.

தேடி வரும் ரூ.74 லட்சம்; பெண் குழந்தை இருக்காங்களா? அப்போ அரசின் இந்த திட்டம் உதவும்!

தேடி வரும் ரூ.74 லட்சம்; பெண் குழந்தை இருக்காங்களா? அப்போ அரசின் இந்த திட்டம் உதவும்!

முதலீடு

இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் (ஆதார் மற்றும் பான்), பணம் செலுத்தும் சீட்டு மற்றும் தபால் அலுவலகத்தில் ரொக்கமாக அல்லது காசோலையில் முதலீடு செய்ய வேண்டிய பணத்தை சமர்ப்பித்து மஹிளா சம்மான் சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.

ரூ.1000 முதலீடு செஞ்சாபோதும்..போஸ்ட் ஆபீஸில் பெண்களுக்கு அசத்தல் திட்டம்! | Mahila Samman Savings Scheme

2 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த பிறகு மொத்தத் தொகையும் அசல் மாற்றும் வட்டியுடன் வைப்பாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் கணக்கு அமைக்க முதலீடு தொகையாக ரூ.1,000 செய்ய அனுமதிக்கிறது. கணக்கில் ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சம் ஆகும்.

அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு டெபாசிட் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதிலும் ரூ. 100க்கு மேல் இருக்க வேண்டும். இந்த திட்டமானது ஒரே டெபாசிட்டரால் குறைந்தபட்சம் மூன்று மாத இடைவெளியில் பல கணக்குகளை வைத்துக்கொள்ளலாம்.

ரூ.1000 முதலீடு செஞ்சாபோதும்..போஸ்ட் ஆபீஸில் பெண்களுக்கு அசத்தல் திட்டம்! | Mahila Samman Savings Scheme

திறந்த ஒரு வருடம் முடிந்த பிறகு 40 சதவீதம் வரை நிலுவைத் தொகையை திரும்பப் பெறலாம். மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கைத் திறந்து 6 மாதங்கள் முடிந்த பிறகும் முன்கூட்டியே மூடலாம்.