என்னை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என்று அழைக்காதீர்கள்!! ஆம்ஸ்ட்ராங் மனைவி வேண்டுகோள்
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மாநில பொறுப்பேற்றுள்ளார்.
பொறுப்பு
இது குறித்தான அறிவிப்பு அதிகாரபூர்வமாக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடன் இணைந்து ஆனந்தன் 2006 ஆம் ஆண்டில் இருந்தே பணியாற்றி வருபவர் என்ற தகவல் கிடைக்கப்பெறுகிறது.
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று சென்னை பெரம்பூரில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் என்றே...
இந்த சூழலில் தான், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதாவது தன்னை திருமதி. ஆம்ஸ்ட்ராங் என்றே பயன்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதற்கு அவர் விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அதாவது ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை நினைவூட்டவே இது போன்று மாற்றியதாக கூறியுள்ளார்.