பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் அறிவிப்பு - மாநில பொறுப்பு பெற்ற ஆம்ஸ்ட்ராங் மனைவி!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில தலைவர்
அதே நேரத்தில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து கட்சிக்கு அடுத்த மாநில தலைவர் யார் என்ற கேள்விகளும் எழுந்தன. ஆம்ஸ்ட்ராங் கொலையால் வெகுண்டெழுந்த திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மாநில தலைவராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அதனை முழுவதுமாக மறுத்து பேசினார் பா.ரஞ்சித். தலைவர் நியமனத்தில் கேள்விகள் நீண்ட நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கூடுதல் பொறுப்பு
இது தொடர்பான கட்சி அறிக்கையில், மாயாவதி மற்றும் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக்சித்தார்த் மற்றும் கோபிநாத் ஆகியோரின் ஆலோசனையில் கட்சியின் மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக பொற்க்கொடி ஆம்ஸ்ட்ராங் நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணை தலைவராக இளமான் சேகர் மற்றும் மாநில பொருளாளராக கமலவேல்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
