ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி - அதிரடி ஆக்ஷன் எடுத்த இபிஎஸ்!!
ஆம்ஸ்ட்ராங் கொலை
வழக்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
தமிழக காவல் துறை விசாரித்து வரும் நிலையிலும், எதிர்க்கட்சிகளின் சார்பில் இது தொடர்பாக CBI விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை அதிகளவில் எழுந்து வருகின்றது.
ஏற்கனவே கைது நடவடிக்கையில் முதல் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டதும் நடந்துள்ள நிலையில், மேலும் இருவர் கைதாகியுள்ளார்கள்.
நடவடிக்கை
மலர்க்கொடி சேகர் என்பவர் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழக இணைச்செயலாளராக இருந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவை பிறப்பித்துள்ளார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக, அதிகாரப்பூர்வ கட்சி அறிக்கையில், மலர்க்கொடி அதிமுக கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்;
அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மலர்க்கொடி நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.