ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுண்டர்!! காலையே சென்னையில் பரபரப்பு
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.
அதிர்ச்சி பின்னணி
இதற்கு பின்னணியில் மற்றுமொரு கொலை சம்பவம் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
அதற்கு பழி வாங்கும் நிகழ்வாகவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என்றெல்லாம் கூறப்படுகிறது. அதே நேரத்தில், சில அரசியல் தலைவர்கள் இந்த விவகாரத்தில் ஆருத்ரா மோசடி பின்னணியும் இருப்பதாக தெரிவித்தார்கள்.
என்கவுண்டர்
இந்த சூழலில் தான், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் சற்று முன்பு என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். காவலில் எடுக்கப்பட்ட திருவேங்கடத்தை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
இது காரணமாக அவர் என்கவுண்டர் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் சொன்னதாக செய்திகள் வெளிவருகினறன.
என்கவுண்டர் நடந்த இடத்தில் சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) நரேந்திரன் நாயர் விசாரணை நடத்தி வருகிறார்.