காங்கிரஸ் கரண்ட் தராததால் மக்கள் தொகை பெருக்கம் - பாஜக அமைச்சர்
காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் வழங்காததால் மக்கள் தொகை பெருகியதாக பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் இல்லை
கர்நாடகாவில் வருகிற மே மாத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. இத்தகைய சூழலில் கர்நாடகாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

ராமர் கோயில் கட்டப்படும் என பாஜக அறிவித்த நிலையில், இலவச மின்சாரம் வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மக்கள் தொகை
அப்போது, "மாநிலத்தில் இப்போது, இலவச மின்சாரம் தருவதாக காங்கிரஸ் கூறுகிறது. இலவச மின்சாரம் தருவார்கள் என்று நம்புகிறீர்களா? அவர்கள் ஆட்சி காலத்தில் மின்சாரம் கொடுக்கவே இல்லை. கிராமங்களில் மின்சாரம் இருந்ததில்லை.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, எங்களால் 24 மணி நேர மின்சாரம் கொடுக்க முடிந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குறைவான மின்சாரம் வழங்கியதால் தான் இங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.