அப்படி மட்டும் கூப்பிடாதீங்க ப்ளீஸ்.. இளைஞரிடம் கெஞ்சிய பாஜக அமைச்சர்!

BJP Nagaland
By Sumathi Nov 04, 2022 07:05 AM GMT
Report

அங்கிள் என அழைத்த இளைஞரிடம் அப்படி அழைக்க வேண்டாம் என பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டெம்ஜென் இம்னா ஆலாங்

நாகலாந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நெய்பியூ ரியோ என்பவர் முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் டெம்ஜென் இம்னா ஆலாங் என்பவர் உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார்.

அப்படி மட்டும் கூப்பிடாதீங்க ப்ளீஸ்.. இளைஞரிடம் கெஞ்சிய பாஜக அமைச்சர்! | Bjp Minister Temjen Imna Viral Tweet

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். மேலும், வேடிக்கையாக பல பதிவுகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம். இநிந்லையில், இவருக்கு டீப் ராவல் என்பவர் படம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

  வைரல் பதிவு

அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நான் அவ்வளவு உடல் பருமனாகவா இருக்குறேன்? மிகவும் திறமையான கலைஞர் எனக்கு இன்ஸ்டாகிராமில் பரிசளித்தார். அவரது அன்பான செயலுக்கு நன்றி கூறுகிறேன் என தெரிவித்திருந்தார்.

அப்படி மட்டும் கூப்பிடாதீங்க ப்ளீஸ்.. இளைஞரிடம் கெஞ்சிய பாஜக அமைச்சர்! | Bjp Minister Temjen Imna Viral Tweet

இதற்கு கமெண்ட் செய்த இளைஞர் ஒருவர், உண்மையாகவே அங்கிள் நீங்கள் பார்க்க ரொம்ப க்யூட்டா இருக்கிறீர்கள். பருமனாக இருக்கும் அனைவரும் கூட இந்த மாதிரி கொலு கொலு முகத்தை பெற மாட்டார்கள் என பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நன்றி சகோதரரே.. ஆனால், நீங்கள் என்னை அங்கிள் என்று மட்டும் அழைக்க வேண்டாம் என்றார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.