தொடரும் சோகம்..!! பிரபல நடிகர் சந்திரமோகன் மரணம்!!
தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு இந்தாண்டு தொடர்ந்து சோகமான வருடமாகவே இருந்து வருகின்றது.
சந்திரமோகன்
ரங்குலா ரத்தினம் என்ற 1966-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சந்திரமோகன். முதல் படமாயினும் சிறந்த நடிகருக்கான நந்தி விருதை அவர் வென்றிருந்தார்.
தமிழில் ஸ்ரீப்ரியா நடித்த நீயா படத்தின் நாயகனாக நடித்து பெரும் பிரபலமடைந்தார் சந்திரமோகன். தெலுங்கு படங்களில் 70, 80-களில் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்த சந்திரமோகன், பிறகு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடிக்க துவங்கினார்.
ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பம்மிடிமுக்கலாவில் பிறந்தார் தொடர்ந்து 55 வருடங்கள் சினிமாவில் நடித்த அவர் 2021 ஆம் ஆண்டு தனது 81வது பிறந்தநாளின் போது சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதுவரை 932 படங்களில் படங்களில் நடித்துள்ள சந்திரமோகன், வயது மூப்பு காரணமாக சில காலமாக உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
82 வயதாகும் சந்திரமோகன், ஹைதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை 10 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு வரும் நவம்பர் 13 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. சந்திரமோகன் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.