போப் பிரான்சிஸ் உடல்நிலை ?செயற்கை சுவாசம் நிறுத்தம் -மருத்துவமனை அதிர்ச்சி தகவல்!
போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 14-ந் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
88 வயதான போப் ஆண்டவர் நுரையீரல் தொற்று பிரச்சினையும், அனீமியா தொடர்புடைய பிளேட்லெட்டுகள் குறைந்ததன் காரணமாக போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் அறிவித்தது. தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனை
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், போப் பிரான்சிஸ்க்கு கடந்த 22ம் தேதி ஆஸ்துமா பாதிப்பு அதிகரித்ததாகவும், இதனால் ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்ததால் அவருக்கு ரத்த மாற்றுச் சிகிச்சையும் நடைபெற்றது.
மேலும், போப் பிரான்சிஸ் உடல்நிலை தற்பொழுது சீராக உள்ளது. இயந்திர உதவியுடன் அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஒட்டுமொத்த மருத்துவ நிலைகளையும் பார்க்கும் போது அவரது உடல் நிலை இன்னும் சிக்கலான நிலையிலேயே நீடிக்கிறது என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.