சிறையில் பெண் கைதிகளின் பாதங்களில் முத்தமிட்ட போப் - என்ன காரணம்?
போப் ஆண்டவர் சிறையில் பெண் கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டுள்ளார்.
போப் ஆண்டவர்
உலகம் முழுக்க உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் மதத்தலைவராக வாட்டிகனில் போப் ஆண்டவர்(86) செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். தற்போது உடல் நலம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்.
ஈஸ்டர் சடங்கு
இந்நிலையில், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் சடங்கு ஒன்று நிகழ்ந்தது.
அதனையொட்டி, ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு முத்தமிட்டார்.
முன்னதாக, வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள். ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தியுள்ளார்.