தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு தேவாலய கதவு திறந்திருக்கும் - சொன்னது போப் பிரான்சிஸ்!
திருச்சபை தன்பாலின ஈர்ப்பாளர்கள் உட்பட அனைவருக்காகவும் திறந்திருக்கும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ்(86) உலகம் முழுவதும் இருக்கும் கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களின் குருவாக திகழ்கிறார். அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் தற்போது உடல் நலம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அதன் வரிசையில், போர்ச்சுகலில் நடந்த உலக இளைஞர் தின கத்தோலிக்க திருவிழாவில் பங்கேற்றுவிட்டு ரோம் திரும்பினார்.
தன்பாலின ஈர்ப்பாளர்கள்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேவாலயங்கள் குறித்து ஏராளமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. சர்ச்கள் அனைவருக்கும் பொதுவானவை. கத்தோலிக்க திருச்சபை தன்பாலின ஈர்ப்பாளர்கள் அனைவருக்கும் திறந்திருக்கும்.
ஆனால், இங்கு வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இருக்கின்றன. எனவேதான் இவர்களுக்கான திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதற்கான அர்த்தம் தன்பாலின ஈர்ப்பு என்பது பாவம் என்பதல்ல. ஒவ்வொருவரும் கடவுகளை தங்கள் சொந்த வழியில் நேசிக்கின்றனர்" எனப் பேசியுள்ளார்.