இந்த உலகத்தில் அழகான விஷயம் பாலியல் உறவுதான் : போப் பிரான்சிஸ் பேச்சால் சர்ச்சை

Pope Francis
By Irumporai Apr 06, 2023 06:12 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

போப் பிரான்சிஸ் பங்கேற்ற கூட்டத்தில் பாலியல் உறவு குறித்து அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

போப் பிரான்சிஸ் விளக்கம் 

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் ஒரு கூட்டம் கடந்த ஆண்டு நடந்தது , இதில் கலந்து கொண்டு பேசிய போப் பிரான்சிஸ் பாலியல் உறவு மற்றும் அது சார்ந்த நம்பிக்கைகள் குறித்த விஷயங்களை பேசினார். இந்த தொகுப்பு தற்போது ஆவணப்படம் போன்று வெளியிடப்பட்டுள்ளது, அதில் அனைவரும் கடவுளின் குழந்தைகள். யாரையும் கடவுள் நிராகரிப்பதில்லை. கடவுள் தந்தையாக இருக்கிறார்.

இந்த உலகத்தில் அழகான விஷயம் பாலியல் உறவுதான் : போப் பிரான்சிஸ் பேச்சால் சர்ச்சை | Sex Is A Beautiful Thing Pope Francis

பாலியல் குறித்த விளக்கம்

அதனால், ஆலயத்தில் இருந்து யாரையும் வெளியேற்ற எனக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், கருக்கலைப்பு பற்றி பேசும்போது, கர்ப்பம் கலைத்த பெண்களிடம் பாதிரியார்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

ஆனால், அந்த வழக்கம் ஏற்று கொள்ளப்படாத ஒன்றாகவே தொடர்ந்து இருந்து வருகிறது என கூறியுள்ளார். மேலும் ,கடவுள் மனிதர்களுக்கு வழங்கிய அழகான விஷயம் ஒன்று பாலியல் உறவு என போப் பிரான்சிஸ் கூறினார் , அவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையினை கிளப்பியுள்ளது.